தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிதி உதவிகளும் இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் காதி பொருட்கள், அரசு உப்பு, பனைவெல்லம் விற்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை ரேஷன் கடைகளில் ஒரு மாதத்தில் 50 ஆயிரத்துக்கும் மேல் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். நிர்ணயத்த தொகைக்கு விற்றால் விற்பனை தொகையில் ஒரு சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.