நுபுர் சர்மா வழக்கில் உச்ச நீதிமன்றம் லட்சுமண ரேகையை தாண்டிவிட்டதாக, ஓய்வுபெற்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் முப்படை வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தலைமை நீதிபதி ரமணாவுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், இரு நீதிபதிகளின் கருத்துகள் துரதிர்ஷடமானது என்றும், இதுவரை இல்லாத வகையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் நீதிபதிகள் கருத்துகள் நீதிமன்ற இயல்பான செயலோடு ஒத்துபோகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தன் மீதான வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி நுபுர் சர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரின் பேச்சு நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டது என கூறியிருந்தது.