பஞ்சாப் பாடகர் சித்து மூசே வாலாவை கொலை செய்துவிட்டு துப்பாக்கிகளுடன் அதனை கொலையாளிகள் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
பிரபல பஞ்சாபி மொழி பாடகரான சித்து மூசே வாலா அவரது சொந்த மாவட்டமான மானசாவில் கடந்த மே 21-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த கொலை குறித்து பஞ்சாப் மாநில காவல்துறையினருக்கு கடுமையான அழுத்தங்கள் உருவானது.
குறிப்பாக துப்பாக்கி கலாசாரம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகியவை குறித்து காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிவதற்கான விசாரணையில் காவல்துறையை தீவிரமாக இறங்கியது.
காவல்துறையின் தீவிர விசாரணையின் முடிவில் ப்ரியாவத், கபில், சச்சின் பிவானி, தீபக் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து முக்கிய குற்றவாளியான அங்கித் சிர்ஸாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) கைது செய்யப்பட்டார். அங்கித் சிர்ஸாவிடமிருந்து பல்வேறு வகையான துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரும் சித்துவை கொலை செய்தபிறகு துப்பாக்கிகளுடன் காரில் பயணித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கைதானவர்களின் செல்போனில் இந்த வீடியோ இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதை தொடர்ந்து, இதில் உள்ளோரின் கொடூர மனப்பாங்குக்கு அரசியல் தலைவர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை பலரும் சமூகவலைதளங்கள் வழியாக கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
#SidhuMooseWala murder: A video of group of shooters including Priyavart Fauji, Ankit Sirsa, who killed #MooseWala can be seen with weapons traveling in the car. #Delhi police has recovered this video from Ankit’s mobile. pic.twitter.com/L0R5fyMnYd
— Parteek Singh Mahal (@parteekmahal) July 4, 2022
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM