பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று (05) பாராளுமன்றத்தில் காரசாரமான வார்த்தை பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச தனது சொந்த கூற்றுகளுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும், ஆட்சியை கைப்பற்ற போராடும் எதிர்க்கட்சியை பார்ப்பது வருத்தமளிப்பதாக கூறிய அவர், ஒரு நாட்டை எப்படி ஆள்வார்கள் என்ற கேள்வியையும் பிரதமர் எழுப்பியிருந்தார்.
பிரதமரின் கேள்விக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, பிரதமர் குறித்து இலங்கைக்கு மட்டுமல்ல, முழு உலகத்திற்கும் தெரியும். எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து உதவிகளை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை பிரதமருக்கு கற்றுக்கொடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
ஆறு மாதங்களுக்குள் மைனஸ் பொருளாதார வளர்ச்சியுடன் பொருளாதாரத்தை மீட்டெடுத்த எந்த நாடும் உலகில் இல்லை என்றும், யாராவது அவ்வாறு செய்திருந்தால், பொருளாதாரத்தில் கின்னஸ் உலக சாதனைக்கு தகுதியான முயற்சியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.