இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் பால் ஹக்கிசை இத்தாலி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
கடந்த மாதம் 19ம் தேதி இத்தாலியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்க சென்ற அவர், இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி இரண்டு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டபட்டதை அடுத்து நட்சத்திர விடுதியிலேயே சிறை வைக்கப்பட்டார்.