அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், வருகிற 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பிதழை அக்கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
11 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்வது, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரை பொதுக்குழுவிலேயே தேர்ந்தெடுப்பது, பொதுச்செயலாளர் தேர்தலை அறிவிக்க செய்வது உள்ளிட்ட விஷயங்கள் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.