வரும் 11 ஆம் தேதி நடக்க உள்ள அதிமுகவின் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,
* ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
* தி.மு.க. ஆட்சி தொடர்பாக கண்டனம் தெரிவித்து தீர்மானம்
* ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான தீர்மானங்கள்
* மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி நடைமுறைப்படுத்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல்
* அ.தி.மு.க.வில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் முழுமையாக அனைத்து வகைகளிலும் காலாவதியாகும் தீர்மானம்
* பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்தி தேர்வு செய்யும் தீர்மானம்
* தேர்தல் நடத்த கால அவகாசம் தேவை என்பதால் இடைக்கால பொதுச்செயலாளரை கூட்டத்திலேயே தேர்ந்தெடுக்கவும் ஏற்பாடு
* அ.தி.மு.க. பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு
* அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நல திட்டங்களை ரத்துசெய்யும் தி.மு.க. அரசை கண்டித்து தீர்மானம்
* விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறியது தொடர்பாக தி.மு.க. அரசுக்கு கண்டனம்
* அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க. அரசை வலியுறுத்துவது தீர்மானம்
* கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்ட முயற்சிப்பதை மத்திய-மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.
* நெசவாளர்கள் பிரச்சினைக்கு மத்திய-மாநில அரசுகள் தீர்வுகாண வேண்டும்.
* அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அ.தி.மு.க.வினர் மீது வழக்கு போடும் தி.மு.க. அரசை கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
#சற்றுமுன் || எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீடு வழக்கு…. உச்சநீதிமன்றம் தரப்பில் வெளியான தகவல்.!#AIADMK #opannerselvam #EdappadiPalaniswami #OPS #EPS #PoliticsLive #Chennai #TamilNadu #TamilNews #Seithipunalhttps://t.co/rbBDWzkEu9
— Seithi Punal (@seithipunal) July 5, 2022