முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை துளியளவும் குறைவடையவில்லை என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டில் பொதுஜன பெரமுனவே இன்றும் செல்வாக்குள்ள கட்சியாக காணப்படுகிறது என்று நாம் நம்புகின்றோம்.
பொதுஜன பெரமுனவின் மீதும், முன்னாள்
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை துளியளவும் குறைவடையவில்லை. எனவே நாம் தேர்தலைக் கண்டு ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.
பொதுஜன பெரமுன அவ்வாறான கட்சி அல்ல.
தேர்தலை எதிர்கொள்ள தயார்
எமது கட்சிக்கெரிதாக பாராளுமன்றத்திற்குள் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையிலேயே ஒரு தொகுதியினர் எதிர்க்கட்சியிலும், பிரிதொரு தரப்பினர் சுயாதீனமாகவும் செயற்படத் தொடங்கினர்.
இவர்களே மகிந்த ராஜபக்ஷவை பதவி நீக்குமாறு கோரினர். மொட்டுசின்னத்தில் பொதுஜன அபரமுன சார்பில் போட்டியிட்ட எவருக்கும் அவ்வாறு கோரும் உரிமை கிடையாது.
எவ்வாறிருப்பினும் மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை இன்னும் குறைவடையவில்லை.
கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு மக்கள் பதிலளிப்பர்.
எந்த தேர்தலானாலும் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் பலம் எமக்கிருக்கிறது.
மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தில் அவரின் வழிகாட்டலின் கீழ் நாம் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெருவோம். அவரையே மக்கள் முழுமையாக நம்புகின்றனர் என்றார்.