மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியினை அதிகரித்தது. இது தங்கம் இறக்குமதியினை குறைக்க அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது. இது வர்த்தக பற்றாக்குறையை குறைக்க உதவும் என்பதோடு, தங்கம் இறக்குமதியும் குறைக்க வழிவகுக்கலாம்.
எனினும் இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் நிபுணர்கள் மத்திய அரசின் இந்த முடிவானது தங்கம் சார்ந்த பங்குகளிலும் எதிரொலிக்கலாம் என கணித்துள்ளனர்.
இன்ஸ்டன்ட் ஆப் மூலம் கடன் வாங்குபவரா நீங்க.. ரொம்ப உஷாரா இருங்க?
தொடர் விரிவாக்கம்
முத்தூட் பைனான்ஸ் தனது கிளைத் திறனை விரிவுபடுத்த அனுமதிப்பதற்கான ரிசர்வ் வங்கியில் ஒப்புதல், மற்ற தங்க நிதிச் சேவை நிறுவனங்களுக்கும், இதை பின்பற்றுவதற்கு மற்ற கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு சாதகமான நுழைவாயிலைத் திறந்துள்ளது. தங்க கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு இந்த கிளை விரிவாக்கம் என்பது மேலும் வளர்ச்சியை அதிகரிக்கும்.
சொத்து மதிப்பினை மேம்படுத்தும்
இது குறித்து ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், மத்திய அரசின் வரி அதிகரிப்பானது தங்கம் விலையை ஊக்குவிக்கலாம். இது தங்க கடன் வழங்கும் நிறுவனங்கள் வைத்திருக்கும் சொத்தின் மதிப்பு அதிகரிக்கலாம். இதன் காரணமாக தங்க நகை கடன் வழங்கும் நிறுவனங்களின் வளர்ச்சியும் அதிகரிக்கலாம்.
இறக்குமதி வரி
நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, தங்கத்திற்கான இறக்குமதி வரியானது 7.5 சதவீதத்தில் இருந்து, 12.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 5% அதிகரித்துள்ளது.
எவ்வளவு தங்கம்?
முத்தூட் மற்றும் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனங்களின் 2014ம் நிதியாண்டு மற்றும் 2022 நிதியாண்டில் CAGR விகிதம், 12% மற்றும் 10% ஆக இருந்தது. அதே காலகட்டத்தில் AUM CAGR விகிதம் 13% மற்றும் 12% ஆக இருந்தது.
கடந்த மார்ச் 31, 2022 நிலவரப்படி மணப்புரம் மற்றும் ஐஐஎஃப் எல்-லில் 5.2 கோடி ரூபாய் மற்றும் 4.9 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது, முத்தூட்டில் ஒரு கிளைக்கு 12.5 கோடி ரூபாய்க்கும் அதிகமான தங்கம் (AUM) இருந்தது.
மொத்த கிளை
மேற்கொண்டு கிளை விரிவாக்கத்திற்கும் ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ள நிலையில், முத்தூட் வங்கியின் AUM அதிகரிக்கலாம். தற்போது முத்தூட் பைனான்ஸ் 4617 தங்க கடன் கிளைகளையும், மணப்புரம் 3829 கிளைகளையும், ஐஐஎஃப்எல் 3296 கிளைகளையும் மார்ச் 2022 நிலவரப்படி கொண்டுள்ளது.
வாங்கலாம்?
ஆக மேற்கொண்டு கிளை விரிவாக்கம் என்பது இந்த நிறுவனங்களின் வளர்ச்சியினை அதிகரிக்கலாம். இண்றைய உற்பத்தி திறன் கொண்ட 150 கிளைகள் 3/4% தங்க AUM அதிகரிக்கலாம். இந்த நிலையில் தான் முத்தூட் மற்றும் மணப்புரன் பங்குகளை வாங்கி வைக்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது. இதன் இலக்கு விலையானது 1509 ரூபாய் மற்றும் 147 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளது.
இன்று முத்தூட் பங்கின் விலை 1059 ரூபாயாகவும், மணப்புரம் பங்கின் விலை 89.65 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
Manappuram and Muthoot stock prices may increase due to central government’s tax increase
Manappuram and Muthoot stock prices may increase due to central government’s tax increase/மத்திய அரசின் ஒற்றை முடிவு.. தங்கமான இந்த இரு பங்குகளிலும் எதிரொலிக்கலாம்..!