இத்தாலி ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த நிலையில் மாயமான 13 மலையேற்ற வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மர்மலாடா சிகரத்தில் பனிப்பாறை இன்னும் நிலையாக இல்லாத சூழலில் மாயமானவர்களின் செல்ஃபோன் சிக்னலை வைத்து டிரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
விபத்து நிகழ்ந்து 36 மணி நேரமாகியும் மாயமானவர்களை மீட்கமுடியாமல் இருப்பதால் அவர்களது நிலை குறித்த கவலை அதிகரித்துள்ளது.