நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சந்தேகம் கிளப்பிய பயில்வான் ரங்கநாதனை தயாரிப்பாளர் கே.ராஜன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
90-களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த மீனா கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த வித்தியாசாகர் என்பரை திருமணம் செய்தகொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளார். இவர் தெறி படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மீனாவின் கணவர் வித்தியாசாகர், கடந்த மாத இறுதியில் திடீரென மரணமடைந்தார். அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற இருந்த நிலையில், நுரையீரல் தானம் கிடைக்க தாமதம் ஏற்பட்டதால், உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மீனாவின் கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதால நடிகரும் பிரபல சினிமா விமர்சகருமான பயில்வர் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மீனாவும் அவரது மகள் நைனிகாவும் திரைப்படங்களில் நடிப்பது பிடிக்காமல் வித்யாசாகர் மனஉளைச்சலில் இருந்தாகவும், மீனா திடீரென சென்னையில் குடியேற காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் வித்யாசகர் இறந்த போது மருத்துவமனை சார்பில எந்த மருத்துவ அறிக்கையும் வெளியாகவில்லை என்று கூறிய பயில்வான் ரங்கநாதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இதை பார்த்த மீனாவின் ரசிகர்கள் எந்த நேரத்தில் எப்படி பேச வேண்டும் என்றே உங்களுக்கு தெரியாதா என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், மீனாவின் கணவர் மரணத்தில் சந்தேகம் கிளப்பிய பயில்வான் ரங்கநாதனுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,
மீனாவின் கணவர் இல்லை அவர் இன்றும் பாதி வாழ்க்கையை வாழ வேண்டும். அது மட்டுமல்லாமல் அவரது குழந்தைக்கு ஒரு அப்பா இல்லை. இதை நினைத்து கலையுலகமே அழுகிறது. ஆனால் இதை வைத்து யூடியூப்பில் பணம் சம்பாதிக்கிறார்கள். மீனாவின் கணவர் இறந்தது குறித்து மருத்துவ அறிக்கை ஏன் வெளியிடவில்லை என்று கேட்கிறான்.
உனக்கு என்னடா அடங்கமாட்டிய இதெல்லாம் நல்லதல்ல என்று எச்சரிக்கும் வகையில் பேசிய அவர், பணம் வேண்டும் என்பதற்காக அடுத்தவன் சாவில் வியாபராம் செய்யாதே எச்சரிக்கயைாக சொல்கிறேன். கமிஷ்னரிடம் புகார் கொடுக்கிறேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
நீ அடுத்தவன் மனைவி நடிகைகளை பற்றி பேசிக்கொண்டே இரு நாங்கள் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று இருந்தால் அவன் பேசிக்கொண்டே தான் இருப்பான் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவான்.யாராக இருந்தாலும் சரி தாய்மார்களையும் நல்லவர்ளையும் புண்படுத்துவது மிகப்பெரிய பாவம் என்பதை எச்சரிக்கையாக சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“