நாட்டில் இப்போது முச்சக்கர வண்டியில் பயணிக்கும் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதிகள் பலர் பாரிய மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோசடியில் ஈடுபடும் சாரதிகள்
முச்சக்கர வண்டி சாரதிகள் தன்னிச்சையாக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் முச்சக்கரவண்டிகளை பயன்படுத்துவதிலிருந்து விலகியுள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
சில முச்சக்கர வண்டி சாரதிகள் பயணிகளிடம் மோசடியாக பணத்தை பெற்றுக் கொள்வதாகவும் இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
சபையில் கடும் குழப்பம்! ஜனாதிபதி கோட்டாபயவை வெளியேறுமாறு கூச்சல்(Live) |
நிராகரிக்கும் மக்கள்
முச்சக்கர வண்டிகளில் பயணிப்போர் இந்த கட்டணங்கள் தொடர்பில் பயணிகள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். மக்கள் முச்சக்கர வண்டியில் பயணிப்பதை நிராகரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.
தொழில்முறை முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் தனது பயண மீட்டரை சரியாக நிறுவி, அந்தத் தொகைக்கான சேவையை வழங்க வேண்டும். அது சிரமமாக இருப்பினும் கூட சரியான தொகையை மக்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.
அதிக பணம் வசூலிப்பதன் காரணமாக இந்த தொழிலும் கூட அழிந்துவிடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.