ரஷ்யாவிற்கு வருமாறு ஜனாதிபதி விளாடிமிர் புடின்(putin) விடுத்த அழைப்பிற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான தாக்குதலை பல்வேறு நாடுகளும் போர் நடவடிக்கை எனவும், சர்வதேச விதிமீறல் என்றும் குற்றம் சாட்டிய நிலையில், சீனா மட்டும் அதனை ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை என தெரிவித்தது.
அத்துடன் ரஷ்யாவுடன் புதிய வணிக மற்றும் பொருளாதார ஓப்பந்தங்களையும் சீனா மேற்கொண்டு வருகிறது.
ரஷ்யாவிடனான சீனாவின் இந்த நெருங்கிய நட்புறவிற்கு மேற்கத்திய நாடுகள் கடுமையான கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
Xi Jinping, general secretary of the Communist Party of #China, rejected #Putin‘s invitation to visit #Russia, citing the #coronavirus pandemic. This was reported by the Japanese newspaper Yomiuri. pic.twitter.com/6Hgk9gmSAu
— NEXTA (@nexta_tv) July 5, 2022
இந்தநிலையில் ரஷ்யாவிற்கு வருகை தருமாறு ரஷ்ய ஜனாதிபதி விடுத்த அழைப்பை கொரோனா பரவல் அச்சத்தை மேற்கோள் காட்டி சீனா மறுத்துள்ளது என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்(Xi Jinping) கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: 315 ரயில் பெட்டிகள்…சிறைப்பிடிக்கப்பட்ட ரஷ்ய, பெலாரஸ் உரங்கள்: உக்ரைன் அதிரடி!
இதுத் தொடர்பான தகவலை ஜப்பானிய செய்தித்தாள் யோமியுரி (Yomiuri)தெரிவித்துள்ளது.