ரிஷிவந்தியத்தை தனி தாலுகாவாக அமைக்க கோரியும், அரசு அறிவியல் கலைக்கல்லூரியை ரிஷிவந்தியத்தில் அமைக்க கோரியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதியின் பாமக எம்எல்ஏ., சி சிவகுமார் கலந்துகொண்டார்.
இந்த ஆர்பாட்டத்தின்போது ரிஷிவந்தியத்தை தனி தாலுகாவாக அமைக்க கோரியும், அரசு அறிவியல் கலைக்கல்லூரியை ரிஷிவந்தியத்தில் அமைக்க கோரியும் பாமகவினர் மற்றும் பொதுமக்கள் கோஷமிட்டனர்.
இதுகுறித்து பாமக எம்.எல்.ஏ., விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
“கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி ரிஷிவந்தியத்தில் இன்று நடைபெற்ற தமிழின போராளி மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க, பாமகதலைவர் அண்ணன் அன்புமணி இராமதாஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி ரிஷிவந்தியத்தை தனி தாலுகாவாக அமைக்க கோரியும், அரசு அறிவியல் கலைக்கல்லூரியை ரிஷிவந்தியத்தில் அமைக்க கோரியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினேன்” என்று பாமக எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
அரசு அறிவியல் கலைக்கல்லூரியை ரிஷிவந்தியத்தில் அமைக்க கோரியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்திய போது…. pic.twitter.com/Lk4IeHDhTi
— C.Sivakumar MLA (@SivakumarState) July 4, 2022