பொதுமக்களின் இன்சூரன்ஸ் தேவைக்கு பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வித்தியாசமான பாலிசிகளை அறிமுகம் செய்து வருகின்றன.
அந்த வகையில் மத்திய அரசு அறிமுகம் செய்த பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற பாலிசி வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த காப்பீட்டில் வெறும் 436 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் வரை காப்பீடு பணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் வாகனம் தொலைந்துவிட்டதா? சாவி இல்லையென்றால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது தெரியுமா?
வங்கி வாடிக்கையாளருக்கு பாலிசி
வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து 436 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு இருப்பதை பார்த்து இருப்பீர்கள். இதுகுறித்து பலர் வங்கி நிர்வாகிகளிடம் கேட்டபோது அந்த ரூ.436 பிடித்தம் செய்யப்பட்டதற்கான விளக்கத்தை வங்கி அதிகாரிகள் அளித்துள்ளனர்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
ஒவ்வொரு வருடமும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற இன்சூரன்ஸ் பாலிசிக்காக ரூ.436 வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த இன்ஷூரன்ஸ் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிடித்தம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மட்டும் ஜூன் மாதம் செய்யப்பட்டுள்ளது.
பாலிசி தொகை அதிகரிப்பு
மேலும் கடந்த ஆண்டு வரை இந்த பாலிசிக்கு ரூ.330 மட்டுமே பிடித்தம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் ரூ.436 பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சில ஆண்டுகளுக்கு ஒருமுறாஇ பாலிசி கிளைம் மற்றும் சில காரணங்களுக்காக பாலிசி தொகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இன்சூரன்ஸ் மற்றும் வங்கி நிர்வாகிகள் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
ரூ.2 லட்சம்
பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற இன்சூரன்ஸ் பாலிசி எடுத்த வாடிக்கையாளருக்கு மரணம் ஏற்பட்டால் ரூபாய் 2 லட்சம் வரை அவரது குடும்பத்திற்கு அல்லது நாமினிக்கு காப்பீடு தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் கூடுதலாக பிடிக்கப்படும் 20 ரூபாய் என்பது விபத்துக்கான பாலிசி என்பதும், வங்கி வாடிக்கையாளருக்கு ஏதேனும் விபத்து நடந்தால் அவரது குடும்பத்திற்கு அல்லது நாமினிக்கு ரூபாய் இரண்டு லட்சம் போய் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவணங்கள்
இந்த பாலிசி குறித்து சில சந்தேகங்களை வாடிக்கையாளர்கள் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக வங்கி தரப்பில் இருந்தோ அல்லது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தரப்பிலிருந்தோ எந்த விதமான ஆவணங்களும் கொடுப்பது இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் வங்கி நிர்வாகிகள் இதுகுறித்து கூறியபோது, ‘வங்கி எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துள்ளதோ, அந்த நிறுவனத்திலிருந்து வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆவணங்கள் அனுப்பப்படும் என்றும் ஒருவேளை அனுப்பவில்லை என்றால் வங்கிகளை அணுகினால் நாங்களே வாங்கித் தருவோம் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
விழிப்புணர்வு
அதேபோல் இந்த இன்சூரன்ஸ் திட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த பிரீமியத்தில் அதிக பணம் கிடைக்கும் இந்த இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என வங்கி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆண்டுக்கு வெறும் ரூ.436 செலுத்துவதன் மூலம் நமது குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் வரை கிடைக்கும் இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி மிகச் சிறந்ததாக இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
தவணைத்தொகை – க்ளைம்
2022 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி காப்பீட்டாளர்களால் இதுவரை தவணைத் தொகை ரூ.9,737 கோடி செலுத்தப்பட்டுள்ளதாகவும், க்ளைமாக ரூ.14,144 கோடி திரும்ப செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயது முதல் 50 வரை
18 வயது முதல் 50 வரை உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் இந்த பாலிசியை தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகங்களில் சேர்ந்து கொள்ளலாம். வங்கி கணக்கு அல்லது அஞ்சல் நிலையத்தில் கணக்கு இருந்தால் போதும் இந்த திட்டத்தில் சேருவதற்கான தகுதி கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலிசியில் சேர்ந்த வாடிக்கையாளரின் வங்கி கணக்கு அல்லது அஞ்சலக கணக்கில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தானாகவே பிரிமியம் தொகை பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிசி தொகை ரூ.436
இந்த திட்டத்தின்படி பிடித்தம் செய்யப்படும் 436 ரூபாயில் 390 ரூபாய் வாடிக்கையாளரின் காப்பீடுக்கும், 30 ரூபாய் முகவர் மற்றும் வங்கி செலவுகளுக்கும் மீதமுள்ள 11 ரூபாய் வங்கி நிர்வாக செலவுக்கும் செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
New Insurance Scheme Gives Rs 2 Lakh Cover at only Rs 436!
New Insurance Scheme Gives Rs 2 Lakh Cover at only Rs 436! | ரூ.436 செலுத்தினால் ரூ.2 லட்சமா? செம பிளானா இருக்கே