வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாவிட்டால் ஜனவரி 1ஆம் தேதி முதல் பா.ஜ.க. சார்பில் பாதயாத்திரை தொடங்கப்படும் என அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை எனக்கூறி பா.ஜ.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று பேசிய போது அவர் இதனை தெரிவித்தார்.