விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் ரஃபேல் நடால், கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அவர், நான்காவது சுற்று ஆட்டத்தில், நெதர்லாந்து வீரர் பொட்டிக்கை (Botic) 6க்கு4, 6க்கு2 7க்கு6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் பட்டங்களை வென்றுள்ள நடால், விம்பிள்டன் பட்டத்தையும் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மகளிர் பிரிவில், ரூமேனியாவின் சிமோனா ஹாலேப், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசாவை 6க்கு1 6க்கு2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, கால் இறுதிக்கு முன்னேறினார்.