மதுரையில் வீட்டில் திருடப்பட்ட 30 சவரன் நகை மற்றும் பணத்தை 24 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
வசந்த நகரை சேர்ந்த சீனிவாச சங்கர நாராயணன் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் மற்றும் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் நேற்று திருடப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், துரிதமாக செயல்பட்டு கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரை 24 மணிநேரத்தில் கைது செய்து நகை மற்றும் பணத்தையும் மீட்டனர்.