புதுடில்லி:கடந்த மே மாதத்தில், நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.12 சதவீதமாக இருந்தது, ஜூன் மாதத்தில் 7.80 சதவீதமாக உயர்ந்துள்ளது என, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பில் ஏற்பட்டிருக்கும் சரிவால், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து உள்ளது. நகர்ப்புறத்தை பொறுத்தவரை, வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.21 சதவீதத்திலிருந்து, 7.30 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, சமூக மேம்பாட்டு கவுன்சிலின் இயக்குனர் டாக்டர் நித்யானந்த் கூறியதாவது:ஜூன் முதல் அக்டோபர் வரையிலான கரீப் பருவத்தின் விதைப்பு துவங்கும் நேரத்தில், வேலையின்மை அதிகரிப்பது வழக்கமானது தான். அதே சமயம், நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளது சாதகமான அம்சமாகும்.இருப்பினும், இன்னும் நாம் கொரோனாவால் ஏற்பட்ட தாக்கங்களிலிருந்து மீளவில்லை என்பதையே ஜூன் மாத நிலவரம் காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.12 சதவீதமாக இருந்தது, ஜூன் மாதத்தில் 7.80 சதவீதமாக உயர்ந்துள்ளது என, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.