பைக் சாகசங்கள் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருவதன் மூலம் 2k kidsகள் மத்தியில் TTF வாசன் பிரபலமாகியிருக்கிறார். TTF வாசனுக்கு சினிமா நடிகர்களுக்கு இணையாக சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்ஸ், சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கிறார்கள்.
கோவையை சேர்ந்த இந்த டிடிஎஃப் வாசன் அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். வாசன் வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரை காண கோவையில் குவிந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து சமூக வலைதளங்களில் எங்கு காணினும் 2k kidsகளின் இன்ஃப்ளூயன்ஸராக இருக்கும் ttf வாசன் எனும் 2k kid பற்றிய பதிவுகள்தான் காணக் கிடைக்கிறது.
Riding bike in 240+km/hr speed and posting in
YouTube.. If you don’t take action, it will encourage
others to do the same. Chief Minister of Tamil Nadu…
Sylendra Babu IPS Tamilnadu Police…@tnpoliceoffl @CMOTamilnadu #TTFVasan #TTFC @annamalai_k @mkstalin pic.twitter.com/FeJCOjoh2J
— தேசப்பிரியன் (@Thesapriyan10) July 4, 2022
இந்த நிலையில், 250 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கில் சென்று வீடியோ எடுத்து பதிவிடும் வாசனால் பலரும், குறிப்பாக இளைஞர்கள் அவரை போன்று பைக் சாகசங்களை செய்ய முற்பட்டால் அது தவறான முன்னுதாரணமாக அமையும் என தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டும், அதிருப்தி கருத்துகள் தெரிவிக்கப்பட்டும் வருகிறது.
இதற்கு முன்பு பப்ஜி மதன் என்ற யூடியூபர் 2k kids மத்தியில் பிரபலமாக இருந்தார். தவறான வழிக்கு இளைஞர்களை இட்டுச் செல்வது உள்ளிட்ட பல புகார்களை அடுத்து பப்ஜி மதன் ஜெயிலில் வாசம் செய்தார்.
அவரைப்போலவே இந்த டிடிஎஃப் வாசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை எனவும் பதிவிடப்பட்டு வருகிறது.
#TTF #TTFVasan is the next #PUBGMadhan. This kinda fools toxic to the society.
Days are numbered Soon he will be |||
Loose funda – Helmet kanapochu ku kavalapadran. He is setting the Bad example – 238 KMPS on NH. pic.twitter.com/WWlPwgovIC
— Mr.SpiderMan (@iSpiderman_web) July 4, 2022
இப்படியான பதிவுகள் உலா வந்த நிலையில் பதறிப்போன டிடிஎஃப் வாசன், “தான் யாரையும் இன்ஸ்பையர் செய்யல, யாரையும் ஹெல்மெட் போடாதீங்க, சாகசம் பன்னுங்கனு சொல்லல. திடீரென எல்லாம் நெகட்டிவ்வா திரும்புது. ஏன்னு தெரியல.
ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துலதான் நான் பைக் ரைடு போறேன். நீங்க சாகசம் பன்னனும்னா தனியா இருக்க இடத்துல பன்னுங்க. ஒருவேளை நான் யாரையாச்சு இன்ஸ்பையர் பன்னிருந்தா மன்னிச்சுருங்க.” என வீடியோ வெளியிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM