உலகின் 5ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை 13 பில்லியன் டாலர் வித்தியாசத்தில் இந்தியா தவறவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2021ஆம் ஆண்டில் ஐந்தாவது இடத்தில் இருந்த பிரிட்டனின் பொருளாதாரத்தை விட இந்தியாவின் பொருளாதார மதிப்பு சற்றே குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரிட்டனை முந்த இந்தியாவிற்கு ஓராண்டே தேவைப்படும் என்றும், பொருளாதார மதிப்பின் புள்ளி விவர எண்களை முழுமைப்படுத்தினால், இரு நாடுகளின் பொருளாதாரமும் 3 புள்ளி 2 டிரில்லியன் டாலர் என்ற அளவில் இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.