Airtel Payments Bank Rewards123: இந்தியாவின் இரண்டாம் பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கி வருகிறது பார்தி ஏர்டெல் நிறுவனம். இதன் துணை நிறுவனமான ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி சேவையில் தற்போது புதிய சந்தா திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.
Rewards123 சேவையின் மூலம் பயனர்களுக்கு கேஷ்பேக் சலுகைகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் பயனர்களுக்கு கூடுதல் கேஷ்பேக்குகள் கிடைக்கும்.
மேலும், பல விதத்திலான ரிவார்டு புள்ளிகளை சந்தாதாரர்கள் பெற முடியும். அதுமட்டுமில்லாமல், மாத கேஷ்பேக் சலுகைகளும் பயனர்களுக்குக் கிடைக்கும்.
BSNL Telecom: சைலண்டாக பயனர்கள் சட்டைப் பையில் கை வைத்த பிஎஸ்என்எல்!
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி சேவை, ஆன்லைன் பிளாட்டினம் மாஸ்டர் டெபிட் கார்டு அம்சத்தையும் கொண்டுள்ளது. நீங்கள் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி பயனராக இருந்தால், மொத்தம் மூன்று சந்தா திட்டங்களை அனுபவிக்க முடியும்.
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி 99 திட்டம் (Airtel Payments Bank 99 Plan)
இந்த Airtel Payments Bank RewardsMini திட்டம் ஆண்டுக்கு ரூ.99 என்ற விலையில் கிடைக்கும். இந்த மினி திட்டம் மூன்று மாத காலத்திற்கு செல்லுபடியாகும்.
பயனர்கள் இலவச பிளாட்டினம் விர்ச்சுவல் டெபிட் கார்டு (SBA) மற்றும் கிளாஸ் ப்ரீபெய்ட் கார்டு (வாலட்டுகள்) ஆகியவற்றுடன் மாதத்தில் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.80 வரை கேஷ்பேக்குகளைப் பெறுகிறார்கள்.
இந்தத் திட்டத்தில், ஏர்டெல் வங்கி கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் வைப்பு தொகையை வைத்திருக்க முடியும். அதேபோல, எந்த நேரத்திலும் அந்த பணத்தை நம்மால் எடுக்க முடியும்.
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி 299 திட்டம் (Airtel Payments Bank 299 Plan)
இந்த Airtel Payments Bank Rewards123+ திட்டம் ஆண்டுக்கு ரூ.299 என்ற விலையில் கிடைக்கும். இது ஒரு ஆண்டு காலம் செல்லுபடியாகும் திட்டமாகும். இந்த திட்டத்தின் பலன்கள் ரிவார்ட்ஸ் மினி திட்டத்தைப் போலவே உள்ளன.
Apps: இந்தியாவில் தடை… ஆனா உலகத்துலேயே அதிகம் சம்பாதிக்கும் செயலிகள் எது தெரியுமா?
அதாவது பயனர்கள் இலவச பிளாட்டினம் விர்ச்சுவல் டெபிட் கார்டு (SBA) மற்றும் கிளாஸ் ப்ரீபெய்ட் கார்டு (வாலட்டுகள்) ஆகியவற்றுடன் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.80 வரை கேஷ்பேக்குகளைப் பெறுகிறார்கள். இந்தத் திட்டத்தில், ஏர்டெல் வங்கி கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் வைப்பு தொகையை வைத்திருக்க முடியும். அதேபோல, எந்த நேரத்திலும் அந்த பணத்தை நம்மால் எடுக்க முடியும்.
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி 499 திட்டம் (Airtel Payments Bank 499 Plan)
இந்த திட்டம் ஆண்டுக்கு ரூ.499 என்ற விலையில் கிடைக்கும். இதுவும் ஒரு ஆண்டு காலம் செல்லுபடியாகும் திட்டமாகும். இந்த திட்டத்தின் பலன்கள் ரிவார்ட்ஸ் 123+ திட்டத்தைப் போலவே உள்ளன. ஆனால் வித்தியாசம் என்னவென்றால், இதனுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவின் அணுகலும் கிடைக்கும்.