முகமது நபிகள் குறித்து நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கு விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், பர்திவாலா ஆகியோர், இந்த விஷயத்தில் நூபுர் ஷர்மாவின் கருத்து நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டதாகவும், இதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
அவர் பொறுப்பற்ற முறையில் பேசியதால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பொதுவாக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கண்டனம் தெரிவிப்பதில்லை. ஆனால் நூபுர் சர்மா வழக்கு விசாரணையின் நீதிபதிகள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் இணைந்து, இதுதொடர்பாக கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் ‘ நூபுர் ஷர்மா வழக்கு விஷயத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து துரதிருஷ்டவசமானது. நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களுக்கும், வழக்கிற்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை. நீதித் துறையின் கண்ணியத்திற்கும் எதிரான இதுபோன்ற கருத்துகள், நீதித் துறையின் எல்லையை மீறிய செயலாகும்’ அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.