Google Pixel 6a Price in India: கூகுள் தனது புதிய பட்ஜெட் போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஆனால் இந்தியாவுக்கு பிக்சல் 6ஏ (Google Pixel 6a) போன் எப்போது வரும் என்று பயனர்கள் காத்திருந்தனர். இந்த சூழலில், தற்போது போன் இம்மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கூகுள் பட்ஜெட் ஸ்மார்ட்போனில் இரட்டை பின்பக்க கேமரா இருப்பது கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. பழைய கூகுள் பிக்சல் போனின் ஒரு கேமராவே, சூப்பர் படங்களை மக்களுக்கு எடுத்துக் கொடுத்தது. அந்தவகையில், இரட்டை கேமராவின் தெளிவுதிறன் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது பயனர்களின் நம்பிக்கை.
Father of Cell Phone: செல்போனை கண்டுபிடித்தவர், அதனை இவ்வளவு நேரம் தான் பயன்படுத்துகிறார்… ஆனால் நாமோ!
கூகுள் பிக்சல் 6ஏ வெளியீடு (Google Pixel 6a launch date in India)
இந்தியாவில் தனது பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனை கூகுள் நிறுவனம் வெளியிட தயங்கியது. ஆனால், இம்முறை பயனர்களை சோதிக்காமல், நிறுவனம் போனை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. ஜூலை மாத இறுதியில் ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று தெரிந்தாலும், சரியான தேதியை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
Nothing Phone (1) Price: நத்திங் போன் (1) விலை வெளியாகியது… அதிர்ச்சியில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்!
புதிய Google Pixel 6a ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.40,000க்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெளியீடு குறித்து பிளிப்கார்ட் ஷாப்பிங் தளம் சமீபத்தில் டீஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் பட்ஜெட் பிக்சல் போனின் விலை $449 டாலராக உள்ளது. இதுவே, இந்திய மதிப்பில் ரூ.34,800 என்றுள்ளது. கூகுள் தரப்பில் இருந்து ஒரே ஒரு வேரியண்ட் மட்டும் தான் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.
கூகுள் பிக்சல் 6ஏ அம்சங்கள் (Google Pixel 6a Specifications)
பிக்சல் 6ஏ போனில் 6.1 இன்ச் முழு எச்டி+ AMOLED டிஸ்ப்ளே 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் வழங்கப்படும். இதன் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 இருக்கும்.
பிற கூகுள் போன்களான பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ ஆகியவற்றில் இருக்கும் அதே புராசஸர் தான் இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் பிரத்யேக டென்சார் சிப்செட் நிறுவப்பட்டிருக்கும்.
Telecom: 100 ரூபாய்க்கும் குறைவான 3 ரீசார்ஜ் திட்டங்கள்; தினசரி 2ஜிபி டேட்டா!
போனில் ரேம் மெமரியாக 6ஜிபி வழங்கப்படும். ஸ்டோரேஜ் மெமரிக்காக 128GB இருக்கும். உறுதியான கட்டமைப்புடன் வரும் இந்த மொபைலின் பின்பக்கம் 2 கேமராக்கள் கொண்ட அமைப்பு கொடுக்கப்படும்.
அதில் 12.2 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் வழங்கப்பட்டிருக்கும். வீடியோ அழைப்புகள், செல்பி எடுப்பதற்காக 8 மெகாபிக்சல் கேமரா இருக்கும். கூகுள் பிக்சல் 6ஏ போன் கேமராவில் 4K தரத்திலான வீடியோக்களை எடுக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
தற்போது ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்கும் ஸ்மார்ட்போன் விரைவில், ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் போன்ற பிற அம்சங்கள் இந்த போனில் அடங்கியுள்ளது.
பேட்டரியைப் பொருத்தவரை 4,306mAh பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வழங்கப்படும். போனின் மேம்பட்ட பாதுகாப்பிற்காக டைடான் எம்2 சிப் (Titan M2 security chip) இதில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் 5 வருடங்களுக்கான இயங்குதள அப்டேட்டுகள் Google Pixel 6a பெறும் என்று கூகுள் உறுதியளித்துள்ளது.
Google-Pixel விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Snapdragon 821சேமிப்பகம்32 GBகேமரா12.3 MPபேட்டரி2770 mAhடிஸ்பிளே5.0″ (12.7 cm)ரேம்4 GBமுழு அம்சங்கள்
Google-PixelGoogle Pixel 128GB