BSNL Recharge Plan under 100: ரீசார்ஜ் திட்டங்கள் முன்பை விட இப்போது விலை அதிகமாகத் தொடங்கிவிட்டது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன.
இந்த நேரத்திலும் 100 ரூபாய்க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு கிடைக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், உண்மையில் இந்த திட்டம் நடப்பில் உள்ளது.
Airtel Payments Bank: ரிவார்ட்ஸ்123 சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்திய ஏர்டெல் வங்கி!
அரசின் நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, 100 ரூபாய்க்கும் குறைவான மூன்று அற்புதமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த பிஎஸ்என்எல் திட்டங்களில் வழங்கப்படும் அம்சங்களை குறித்து அறிந்து கொள்ளலாம்.
Nothing Phone (1) Price: நத்திங் போன் (1) விலை வெளியாகியது… அதிர்ச்சியில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்!
பிஎஸ்என்எல் ரூ.87 திட்டம் (BSNL 87 recharge details)
இது நிறுவனத்தின் மலிவான ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்றாகும். ரூ.87 ரீசார்ஜ் திட்டம் 14 நாள்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா பலன்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், மொபைல் விளையாட்டுகளின் அணுகல் கிடைக்கும்.
Moto G42: AMOLED டிஸ்ப்ளே, 50MP கேமரா – பட்ஜெட் மோட்டோ போனோட விலைய கேட்டா வாயடச்சு போய்டுவீங்க!
பிஎஸ்என்எல் ரூ.97 திட்டம் (BSNL 97 plan details 2022)
கூடுதலாக ரூ.10 மட்டும் செலுத்தி அதிக டேட்டா, வேலிடிட்டியைப் பெற இந்த திட்டம் சிறந்ததாகும். பிஎஸ்என்எல் ரூ.97 திட்டம் 18 நாள்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. கூடுதலாக, லோக்துன் உள்ளடக்கம் எளிதாக்கப்படுகிறது.
Samsung Galaxy: வெறும் ரூ.17,000க்கு சாம்சங்கின் 55ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிளாக்ஷிப் போன்!
பிஎஸ்என்எல் ரூ.99 திட்டம் (BSNL 99 plan details)
ரூ.97 ரீசார்ஜ் திட்டத்தைப் போலவே இந்த திட்டமும் 18 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ரீசார்ஜ் திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற குரல் அழைப்புடன் உங்களுக்கு பிடித்த அழைப்பாளர் ட்யூனை அமைக்க அனுமதிக்கிறது. இது தரவு மற்றும் SMS ஐ ஆதரிக்காது.