நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளைஞர் ஒருவர், நிவாரணம் பெர மருத்துவரிடம் சென்றுள்ளார். மருத்துவமனைக்குச் சென்று பரிசோத்த பின் டாக்டர்கள் எக்ஸ்ரே எடுக்குமாறு பரிந்துரைத்தனர். ஆனால் எக்ஸ்ரேயை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
பாதிக்கபப்ட்டவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து உள்ளே இருந்த சுமார் 233 பொருட்களை அகற்றினர். இதுபோன்ற சம்பவங்கள் மிக மிக அரிதாகவே காணப்படுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
துருக்கியின் இபெக்கியோலுவில் வசிக்கும் புர்ஹான் டெமிரின் இளைய சகோதரர் தான் கடும் வயிற்று வலியினால் பாதிக்கப்பட்டார். கடுமையான வயிற்று வலி காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரது வயிற்றில் இருந்து சுமார் 233 பொருட்கள் வெளியே எடுக்கப்பட்ட சம்பவம் மிகவும் பேசு பொருள் ஆகியுள்ளது.
புர்ஹான் டெமிரின் 35 வயது இளைய சகோதரர் சிறிது காலத்திற்கு முன்பு வயிற்று வலி அடிக்கடி ஏற்படுவதாக புகார் செய்தார். முதலில் அவர்கள் அதை சாதாரணமாகக் கண்டார்கள். சில நாட்களாக மருந்து சாப்பிட்டும் வலி தீராததால் தம்பியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர்கள் அல்ட்ராசவுண்ட் மற்றும் எக்ஸ்ரே ஸ்கேன் மூலம் எண்டோஸ்கோபி செய்து பார்த்தபோது அந்த அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உண்மையில், 35 வயது இளைஞரின் வயிற்றில் 233 சிறிய மற்றும் பெரிய பொருட்கள் இருந்தன.
மேலும் படிக்க | முத்தமிட்டு முதலையை மணந்த மேயர் – மெக்சிகோவில் விநோதம்
பாதிக்கப்பட்டவரின் வயிற்றில் நாணயங்கள், பேட்டரிகள், காந்தங்கள், நகங்கள், கண்ணாடித் துண்டுகள், கற்கள் மற்றும் திருகுகள் போன்ற பொருட்கள் இருந்தன. மருத்துவர்கள் பின்னர் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு வயிற்றில் இருந்து இவை அனைத்தையும் அகற்றினர்.
இதுகுறித்து அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பினிசி கூறுகையில், ‘அறுவை சிகிச்சையின் போது, வயிற்றுச் சுவர் வழியாக ஒன்று அல்லது இரண்டு ஆணிகள் குத்திக் கொண்டிருந்ததை கண்டறிந்தோம். இது தவிர, பெரிய குடலில் இரண்டு உலோகத் துண்டுகள் மற்றும் வெவ்வேறு அளவுகளில் இரண்டு கற்கள் இருந்தன. இது தவிர, வயிற்றில் பேட்டரிகள், காந்தங்கள், ஆணிகள், நாணயங்கள், கண்ணாடித் துண்டுகள், திருகுகள் ஆகியவையும் இருந்தன. வயிற்றில் இருந்த அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக அகற்றினோம்.
குழந்தை பருவத்தில், குழந்தைகள் தற்செயலாக சிலவற்றை தன்னை அறியாமல் விழுங்கும் சம்பவங்களை கேட்டிருப்போம். பொதுவாக இந்த வகையான பிரச்சனை பெரியவர்களிடம் மிகவும் அரிதாகவே காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இத்தகைய பிரச்சனை மனநோயாளிகள், கைதிகள் போன்றவர்களிடமும் காணப்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அறுவை சிகிச்சை எப்போது நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்த செய்தி ஜூன் 15 அன்று உள்ளூர் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவரின் சகோதரர் புர்ஹான், ‘மருத்துவர்களின் ஆதரவுக்கு நன்றி’ என்று கூறுகிறார்.
மேலும் படிக்க | பூமியை நெருங்கும் எவரெஸ்டை விட பெரிய வால் நட்சத்திரத்தினால் ஆபத்து உள்ளதா…
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!