Yaanai: "எனக்கு பிடிக்காதவங்களை மனசுல வச்சுதான் வில்லனுக்கு வசனம் எழுதுவேன்" – ஹரி

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘யானை’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அத்திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் நம்மிடையே பகிர்ந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் ஹரி. அந்நேர்காணலின் இரண்டாம் பகுதி இதோ…

இயக்குநர் ஹரி

சிங்கம் படம் எடுக்கும்போது, 3 பாகங்களையும் அடுத்து அடுத்ததாக எடுத்துவிட்டீர்கள். ஆனால், சாமி படத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு தாமதம்?

ரொம்ப நாளைக்கு அப்புறம் விக்ரம் சார்கூட படம் பண்ணனும்னு நினைச்சு உருவானது தான் சாமி ஸ்கொயர். மத்தபடி லேட்டா படம் எடுக்கணும்னு நினைச்சு எடுக்கல. `சாமியின் வேட்டை தொடரும்’னு முதல் பாகத்துல போட்டது, சாமி 2 படத்திற்காகத்தான். அது வேற ஒரு மிஷன் காக வச்சது. ஆனா ரொம்ப கால தாமதம் ஆனதால, அடுத்த ஜெனரேஷன காட்டுவோம்னு தான் சாமி ஸ்கொயர் எடுத்தேன்.

வசனங்கள் எப்படி தனித்துவமாக வைக்கிறீர்கள்?

வில்லனுக்கு டயலாக் எழுதும்போது எனக்கு பிடிக்காத யாரயாவது மனசுல வச்சிட்டு எழுதுவேன். மத்தபடி எல்லாமே கலந்து பேசி எழுதுறதுதான். மக்களுக்கு கருத்த கருத்தா சொல்லக்கூட வில்லன் மூலமா திட்டி சொல்லணும்னு தான் பெரும்பாலான டயலாக் வைப்பேன்.

இயக்குநர் ஹரி

ஐயா, சிங்கம், வேங்கை என பிரகாஷ்ராஜ் உடன் 3 படம் பண்ணியுள்ளீர்கள். அவரைப் பற்றி…

பிரகாஷ் ராஜ் சார் நடிக்க ஆரம்பிச்சாருன்னா நம்ம தேவைக்கும் அதிகமா நடிப்பாரு. நாம தான் கொஞ்சம் கம்மி பண்ணச் சொல்லணும். அந்த அளவுக்கு ரொம்ப எனர்ஜெட்டிக்கா இருப்பாரு. அதனாலதான் இப்பவும் அவரு அவ்ளோ பெரிய இடத்துல இருக்காரு. மயில்வாகனம் கேரக்டர ஏத்தி விட்டதே அவருதான். படம் வெளியான மூனு நாள் கழிச்சு எனக்கு கால் பண்ணி, ‘படம் நல்லா வந்திருக்கு. எல்லாரும் என்ன பாராட்டுறாங்க. ஆனா இந்த பாராட்டு எல்லாம் ஹரிக்கு தான் போணும். அவர் தான் இந்த கேரக்டர் அமைச்சது. அதுல நடிச்சது மட்டும் தான் நான் னு சொல்லிட்டேன்’னு சொன்னாரு. அவ்ளோ உண்மையாக இருப்பார். நாம சொல்ற விஷயத்துல அவருக்கு சந்தேகம் இருந்தாலும், சொன்னதை சொன்னப்படியே பண்ணிடுவாரு.

உங்களது ஆரம்பகால படங்கள் அனைத்திலும் வடிவேலு இருப்பார். அவர் கூட ஏதாவது சுவையான சம்பவங்கள் நடந்ததுண்டா?

வடிவேலு சார்லாம் ஒரு சீன அப்படியே தூக்கிட்டு போயிடுவாரு. அவர் இருந்தாலே செட் எல்லாம் கலகலப்பா இருக்கும். ஜாலியா ஏதாவது கோமாளித்தனம் பண்ணிட்டே இருப்பாரு. அவர்கூட சேர்ந்து நானும் ஜாலியா இருப்பேன். வேல் படத்துல அந்த டீ கடை காமெடி எல்லாம் ஒரு கற்பனையான சீன். அதற்கு அவ்வளவு எதார்த்தமா ரியாக்ஷன் கொடுத்திருப்பாரு. இவ்வளவு நாள் அவர் சினிமால இல்லாதது, அவருக்கு இழப்பு இல்ல. ரசிகர்களுக்கும் சினிமாவுக்கும் தான் அது இழப்பு.

நீங்கள் இயக்குநர் என்பதை தாண்டி பாடலாசிரியராகவும் இருக்கிறீர்கள். அதைப் பற்றி…

சூழ்நிலை காரணமாகத்தான் சில நேரம் நானே பாட்டு எழுதுவேன். அப்படி எழுதின பாட்டு தான் ‘என்ன சொல்ல போற’. ஆனால் பின்னாடி அதுவும் ஹிட் ஆகிடுச்சு. ஒரு பாடலாசிரியர் கூட உக்காந்து பாட்டு எழுதி வாங்கணும்னு தான் எனக்கு ஆசை. நேரம் பற்றாக்குறையால் நானே பாட்டு எழுதுறேன். அதனால பாட்டு எழுதிட்டே இருக்கணும்னுலாம் எனக்கு பெரிய ஆசை இல்ல.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.