வாஷிங்டன் : அமெரிக்கா அனுப்பிய செயற்கைக்கோள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘நாசா’ இரண்டு தனியார் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து, ‘கேப்ஸ்டோன்’ என்ற 25 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை, நியூசிலாந்தின் மகியா தீவில் இருந்து கடந்த வாரம் அனுப்பியது. பூமியின் சுற்று வட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்த செயற்கைக்கோள், நேற்று அங்கிருந்து விலகி நிலவை நோக்கி செல்லத் துவங்கியது.
இந்த செயற்கைக்கோள் நான்கு மாதங்களில் நிலவின் சுற்று வட்டப் பாதையை அடையும் என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும், ‘கேட்வே’ என்ற விண்வெளி நிலையத்தை, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளி வீரர்களை, ‘ஆர்ட்டெமிஸ்’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவின் மேற்பரப்பில் இறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்கா அனுப்பிய செயற்கைக்கோள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘நாசா’ இரண்டு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.