savukku shankar Tamil News: தமிழக லஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரியும் தற்போது சவுக்கு இணையதளத்தை நடத்தி வருபவர் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர். சமூக வலைதளங்களில் பிரபலமாக வலம் வரும் இவர், தனது இணையபக்கம், ட்விட்டர் பக்கம் மற்றும் பல்வேறு யூட்யூப் சேனல்களில் அன்றாட அரசியல் நிகழ்வு குறித்து காரசாரமாக பேசி வருகிறார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பரபரப்பான கருத்துக்களை முன்வைத்து வரும் அவரது பேச்சுகளுக்கு ரசிகர்கள் ஏராளம்.
இந்த நிலையில் தான், சவுக்கு சங்கர் ட்விட்டர் பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது. ட்விட்டரின் தனியுரிமைகளை பின்பற்றாததால் சவுக்கு சங்கர் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தற்போதுவரை தெரியவில்லை
முன்னதாக, சவுக்கு சங்கர் நீதித்துறையின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்தும், காவல்துறையில் பின்பற்றப்படும் ஆர்டலி முறை பற்றியும் கடுமையான விமர்சனங்களை சமீப காலமாக முன்வைத்து வருகிறார். தவிர, சிறிது நாட்களுக்கு முன்னர் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் இவர் மீது தேசிய பெண்கள் கமிஷனில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil