இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எம்பி பதவி
மாநிலங்களவை நியமன எம்பியாக இளையராஜா நியமனம்
இளையராஜாவுக்கு நியமன எம்பி பதவி – அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்பியாக நியமனம்
இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளதை பிரதமர் மோடி டிவிட்டரில் அறிவித்தார்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்
அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு இளையராஜா அறிமுகமானார்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 நியமன உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்
கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்கள்
இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 2018-ஆம் ஆண்டு இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார்
இசையமைப்பாளர் இளையராஜா தற்போது அமெரிக்காவில் இருக்கிறார்