Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் குழப்பமானவை. முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முதலில் குழப்பத்தை அளிக்கும் விடை தெரியும்போது ஆச்சரியத்தை அளிக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடியவையாகவும் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், நுண்ணறிவை பரிசோதனை செய்கிற ஐக்யூ டெஸ்ட் படங்களாகவும் இருக்கின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நெட்டிசன்களின் அடிக்ஷன், டிஜிட்டல் ஜோசியம், ஆளுமை சோதனை, பொழுது போக்கு புதிர் இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அந்த அளவுக்கு இணையத்திலும் சமூக ஊடகத்திலும் நெட்டிசன்களை அந்த அளவுக்கு காந்தம் போல ஈர்த்து வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டில் உள்ள பர்னீச்சர்கள், சுவர் கடிகாரம், தரை விரிப்பு, தலையணை, பாய், சுவர் படங்கள், வீட்டுக்குள் வளர்க்கும் செடிகள், தொங்கும் விளக்குகள் என இப்படி நிறைய இருக்கிறது. இதில் சம்பந்தம் இல்லாமல் தனியாக இருக்கும் ஒரு படத்தை 20 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால். இதுவரை அந்த ரிமோட் படத்தை 1% பேர்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். கூர்மையான பார்வையுடைய நீங்களும் அந்த ரிமோட் படத்தைக் கண்டுபிடித்து அந்த 1% பேர்களின் வரிசையில் சேரலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை முதன் முதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பர்னீச்சர் நிறுவனம்தான் வெளியிட்டுள்ளது. அவர்கள் பல இண்டீரியர் டிசைன் அடிப்படையிலான நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வெளியிட்டுள்ளனர். நீங்கள் இந்த படத்தில் சம்பந்தம் இல்லாத தனியான பொருளை 20 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இதோ விடையைக் கிழே தருகிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“