சிங்கப்பூர்:இந்தியாவுக்கு, அக்., 30 முதல், மீண்டும் முழு விமான சேவை அமலுக்கு வர உள்ளதாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், கொரோனா கட்டுப்பாடு காரணமாக, இரண்டு ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது, மீண்டும் பயணியர் விமான சேவை அதிகரித்து உள்ளது.
இது குறித்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவுக்கு, அக்., 30 முதல், மீண்டும் முழு அளவிலான பயணியர் விமான சேவை மேற்கொள்ளப்படும்.தற்போது, சென்னைக்கு வாரத்தில், 10 முறை மேற்கொள்ளப்பட்டு வரும் பயணியர் விமான சேவை, அக்., முதல், 17 ஆக அதிகரிக்கப்படும். கொச்சிக்கு பயணியர் விமான சேவை, 7ல் இருந்து, 14 ஆக உயர்த்தப்படும். கொரோனாவுக்கு முன் இயங்கியது போல, அக்., முதல் இந்தியாவுக்கு முழு வீச்சில் பயணியர் விமான சேவை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்:இந்தியாவுக்கு, அக்., 30 முதல், மீண்டும் முழு விமான சேவை அமலுக்கு வர உள்ளதாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், கொரோனா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.