இந்திய அரசுக்கு எதிராக ட்விட்டர் வழக்கு!

அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட ட்விட்டர் கணக்குகளில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என தங்களுக்கு உத்தரவிட்டுள்ள இந்திய அரசு, அதனை பரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுக்குப் பிறகும், ட்விட்டர் தளத்தில் சில பதிவுகள் நீக்கப்படாமல் உள்ளது. அதனை நீக்கவில்லை என்றால் என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மத்திய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து, மத்திய அரசுக்கு எதிரான ட்விட்டர் தொடர்ந்துள்ள வழக்கு பற்றி முதலில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, மத்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்றால் குற்றவியல் நடவடிக்கைகள் பாயும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ட்விட்டரை எச்சரித்துள்ளதாக தெரிகிறது.

அமெரிக்க சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர், நீதித்துறையை நாடியுள்ள முயற்சியானது, ட்விட்டர் பதிவுகள் தொடர்பாக மத்திய பாஜக அரசுடன் வளர்ந்து வரும் மோதலின் ஒரு பகுதியாகும். அரசாங்கத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட சில பதிவுகளை நீக்குமாறு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ட்விட்டர் நிறுவனம் கடைப்பிடிக்கத் தவறியதால் ட்விட்டருக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே மோதல் வெடித்தாக கூறப்படுகிறது.

சீக்கிய பிரிவினைக்கு ஆதரவான கணக்குகள், விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் பதிவுகள், கொரோனா தொற்றுநோயை அரசாங்கம் கையாள்வதை விமர்சிக்கும் ட்வீட்கள் உள்ளிட்ட பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசு ட்விட்டர் இந்தியா நிறுவனத்தை கடந்த ஆண்டு கேட்டுக் கொண்டது. ஆனால், சமூக ஊடக நிறுவனங்கள் சில பதிவுகளை தங்கள் தளங்களில் இருந்து அகற்றுவதற்கான மத்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த பின்னணியில், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட ட்விட்டர் கணக்குகளில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என தங்களுக்கு உத்தரவிட்டுள்ள இந்திய அரசு, அதனை பரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. ட்வீட்களை நீக்குவது பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை அடியோடு பாதிக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

ட்விட்டரின் வழக்கு குறித்து மத்திய அரசு கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், ட்விட்டரில் பதிவுகளை அகற்றும் கொள்கையை மத்திய அரசு ஆதரித்துள்ளது, சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறியுள்ளதால் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என்று கூறியுள்ளது. இருஒருபுறமிருக்க, தங்களது கொள்கைகளை மீறுவதாகக் கூறி, அரசியல்வாதிகள் உட்பட செல்வாக்கு மிக்க நபர்களின் கணக்குகளைத் தடுக்கும் ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.