குறிப்பிட்ட பதிவுகளை நீக்க இந்திய அரசு நிர்பந்திப்பதாகக் கூறி ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
விவசாயிகள் போராட்டம், தனி சீக்கிய நாடு முழக்கம், கொரோனா காலத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பதிவு செய்யப்படும் கருத்துகளை நீக்குவது தொடர்பாக சமீபத்தில் மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. உயர் பொறுப்பில் உள்ள சிலர் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக ட்விட்டர் நிறுவனம் விமர்சித்துள்ளது. இந்திய அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM