ஓவர் நைட்டில் தலைகீழாக மாறிய பிரிட்டன் அரசு.. ரிஷி சுனக் உட்பட 5 அமைச்சர்கள் ராஜினாமா..!!

உலகின் முன்னணி வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டன் பணவீக்கம், பொருளாதாரச் சரிவு மத்தியிலும் ரெசிஷன் பயத்தில் நடுங்கி இயங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சான் தலைமையிலான நிர்வாகக் குழு அடுத்தடுத்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினர் அதிகப்படியான நெருக்கடியை உருவாக்கினர்.

இதனால் ஒரே நாளில் பிரிட்டன் அரசு தலைகீழாக மாறியது, 24 மணிநேரத்தில் 4 முக்கிய அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகும் அளவிற்கு நெருக்கடி உருவாகியுள்ளது.

இப்படி என்ன தான் நடந்தது.. வாங்க முழுசா பார்ப்போம்..

இனி யாரையும் நம்ப தேவையில்லை.. இந்தியா-ரஷ்யா டீம்.. விளாடிமிர் புதின் தரமான திட்டம்..!

கிறிஸ் பின்சர்

கிறிஸ் பின்சர்

பிரிட்டன் அரசின் துணை தலைமை விப் மற்றும் வீட்டுச்சேவைத் துறையின் கருவூல தலைவரான கிறிஸ் பின்சர் குடிபோதையில் இரண்டு ஆண்களைத் தவறான இடத்தில் தொட்டதாகவும், இதில் ஒருவர் கிறிஸ் பின்சர் அலுவலகத்தில் பணியாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன்

இந்தச் சம்பவம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கும் வரையில் கொண்டு சென்ற நிலையில், கிறிஸ் பின்சர் போரிஸ் ஜான்சன்-க்கு மிகவும் நெருங்கியவர் என்பதால் பதவியை ராஜினாமா செய்யக் கூறிவிட்டு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

சரக்கு பார்ட்டி
 

சரக்கு பார்ட்டி

இதோடு கொரோனா தொற்றுக் காலத்தில் பிரிட்டன் முழுவதும் லாக்டவுனில் மூழ்கியிருக்கும் போது போரிஸ் ஜான்சன் மற்றும் அவருடைய சகாக்கள் (அதில் பிரிட்டன் நிதியமைச்சரான ரிஷி சுனக்-ம் அடக்கம்) பிரதமர் வீட்டில் சரக்கு பார்ட்டி வைத்துள்ளனர்.

playgate scandal

playgate scandal

இதுமட்டும் அல்லாமல் போரிஸ் ஜான்சன் தலைமையில் பிரிட்டன் அரசின் முக்கிய அமைச்சர்கள் பெரும்பாலானோர் அவர்களுடைய அலுவலகத்தில் மது அருந்தும் வழக்கத்தைக் கொண்டு உள்ளனர். இது 2020ல் இருந்து பல முறை பத்திரிக்கையாளர்களிடம் பிரிட்டன் அமைச்சர்கள் சிக்கிய நிலையில் இதற்கு playgate scandal எனவும் பெயரிட்டு உள்ளனர்.

10th downing street

10th downing street

மேலும் கொரோனா தொற்றுக் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும்போதே போரிஸ் ஜான்சன் தனது அலுவலகமான 10th downing street-ல் தனது பிறந்த நாள் பார்ட்டி உட்படப் பார்ட்டிகளையும், கூட்டத்தையும் நடத்தியுள்ளார்.

அபராதம்

அபராதம்

இந்தச் சரக்கு பார்ட்டி, அலுவலகத்தில் மது அருந்தும் நடவடிக்கைக்காகப் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் நடவடிக்கையின் வாயிலாகச் சுமார் 83 பேர் மீது 126 அபராதங்கள் விதிக்கப்பட்டது. முதல் முறையாகப் பிரிட்டன் பிரதமர் அபராதம் எதிர்கொண்டார்.

கிறிஸ் பின்சர் முதல் ராஜினாமா

கிறிஸ் பின்சர் முதல் ராஜினாமா

இந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாத போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இருந்து முதலாவதாகப் பிரிட்டன் அரசின் துணை தலைமை விப் மற்றும் வீட்டுசேவை துறையின் கருவூல தலைவரான கிறிஸ் பின்சர் தனது பதவியை ராஜினாமா செய்யப்பட்டார், பின்னர்க் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

இதைத் தொடர்ந்து 42 வயதான பிரிட்டன் அரசின் நிதியமைச்சரும், இன்போசிஸ் நிறுவனர் நாராணயமூர்த்தியின் மருமகன் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன் தனது தவறுகளுக்கு மன்னிப்பு கேட்ட சில நொடியில் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

சாஜித் ஜாவித்

சாஜித் ஜாவித்

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான மாநிலச் செயலாளரான சாஜித் ஜாவித்-ம் ராஜினாமா செய்தார். சாஜித் ஜாவித் பிரிட்டன் நிதி துறையிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியலில் ரிஷி சுனக்-கிற்கு 10 வருடம் மூத்தவர்.

வில் குயின்ஸ்

வில் குயின்ஸ்

ரிஷி சுனக், சாஜித் ஜாவித் ஆகியோர் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான அமைச்சரான வில் குயின்ஸ் ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

லாரா ட்ராட்

லாரா ட்ராட்

வில் குயின்ஸ்-ஐ தொடர்ந்து ஜூனியர் போக்குவரத்து அமைச்சரான லாரா ட்ராட், போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கையைத் தான் இழந்ததால் பதவி விலகுவதாகக் கூறியுள்ளார்.

நாதிம் ஜஹாவி

நாதிம் ஜஹாவி

இதற்கிடையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் ரிஷி சுனக் ராஜினாமா செய்ததை அடுத்து ஈராக்கில் பிறந்த கல்வித்துறை செயலாளரான நாதிம் ஜஹாவி-யை புதிய நிதியமைச்சராக நியமித்தார்.

நாங்க ஒன்னு சேர்ந்துட்டோம்.. ஜோ பைடன் முடிவால் சீனா செம ஹேப்பி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

UK Boris Johnson Govt toppled after 5 ministers resigns after sleaze and scandal

UK Boris Johnson Govt toppled after 5 ministers resigns after sleaze and scandal ஓவர் நைட்டில் தலைகீழாக மாறிய பிரிட்டன் அரசு.. ரிஷி சுனக் உட்பட 5 அமைச்சர்கள் ராஜினாமா..!!

Story first published: Wednesday, July 6, 2022, 18:31 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.