15 வயது சிறுமியுடன் 28 வயது இளைஞருக்கு நடக்க இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, விருத்தாசலம் அடுத்த படுகளானத்தம் கிராமத்தைச் சேர்ந்த வீர தமிழன் (28) என்வருடன் இன்று காலை நல்லூரில் உள்ள வில்வனேஸ்வரன் ஆலயத்தில் திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில், தகவலின் பேரில் அங்கு சென்ற சமூக நலத்துறையினர் நடக்க இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து ஆவினன்குடி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், சிறுமி திட்டக்குடி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை மீட்டு கடலூரில் உள்ள மாவட்ட குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM