தட்சிண கன்னடா : துாங்கும்போது கணவனை குத்தி கொன்ற மனைவி, கத்தியுடன் உடல் அருகில் அமர்ந்திருந்தார். அவரை, கிராமத்தினர் போலீசில் பிடித்து கொடுத்தனர்.தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி அருகே உள்ள நாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பேபி பொட்டாஸ், 55. இவரது மனைவி நல்லம்மா, 50. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.மகளுக்கு திருமணமாகி விட்டது; ஒரு மகன் வெளிநாட்டிலும், மற்றொரு மகன் வெளியூரிலும் வசிக்கின்றனர். தம்பதி தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை, நல்லம்மா வீட்டில் கத்தியுடன் உட்கார்ந்திருந்தார். அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, அருகில் அவரது கணவர் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். கணவரை கொன்ற பின், அவர் அருகில் கத்தியுடன் ரிலாக்சாக அமர்ந்திருந்தது தெரியவந்தது.அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார், கணவர் உடலை அப்புறப்படுத்தி, மனைவியை கைது செய்தனர்.சில நாட்களாக நல்லம்மா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருந்தார். மனநல பாதிப்பால் கொலை செய்தாரா அல்லது குடும்ப தகராறில் கொலை செய்தாரா என்பது தெரியவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement