பெங்களூரு: கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-கர்நாடகத்தில் நேற்று 26 ஆயிரத்து 437 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 1,127 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 1,053 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை. இதுவரை 39 லட்சத்து 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று 1,044 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 39 லட்சத்து 28 ஆயிரத்து 397 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்கள். 6 ஆயிரத்து 481 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 4.26 சதவீதமாக உள்ளது.
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1,127 பேருக்கு பாதிப்பு உறுதியாகி இருப்பது சுகாதாரத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.