வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: காளி தேவியை மதுவை ஏற்றுக்கொள்ளும் மற்றும் இறைச்சி உண்ணும் தெய்வமாக கற்பனை செய்ய தனக்கு முழு உரிமை உள்ளதாக தெரிவித்துள்ள திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹூவா மொய்த்ரா மீது ம.பி.,யின் போபால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், அதற்கு பயப்பட மாட்டேன் என மொய்த்ரா பதிலடி கொடுத்துள்ளார்.
‘காளி’ என்ற ஆவணப் படத்திற்காக, ஹிந்து தெய்வத்தை அவமதித்து ‘போஸ்டர்’ வெளியிட்டுள்ள இயக்குனர் லீனா மணிமேகலையால் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆங்கில டிவி சேனல் சார்பில் கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹூவா மொய்த்ரா பேசுகையில், பூடான் அல்லது சிக்கிம் சென்றால், அவர்கள் வழிபாடு நடத்தும் போது, அவர்களின் கடவுளுக்கு ‘விஸ்கி’ படைக்கின்றனர். இப்போது, உத்தர பிரதேசம் சென்று, உங்கள் கடவுளுக்கு பிரசாதமாக ‘விஸ்கி’யை பிரசாதமாக வழங்குகிறார்கள் என கூறினால், அதனை தெய்வ நிபந்தனை என்கின்றனர். என்னை பொறுத்தவரை கடவுள் காளி தேவி இறைச்சி உண்ணும் மற்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம். மேற்கு வங்கத்தின் தாராபித் சென்றால், அங்கு சாதுக்கள் புகைபிடிப்பதை பார்க்க முடியும். அங்கு, அது தான் காளி பக்தர்களின் வழிபாடு. நான் ஹிந்துவாக உள்ளேன். காளி வழிபாட்டாளராக இருப்பதால், காளியை அப்படி கற்பனை செய்ய உரிமை உண்டு. அது என் சுதந்திரம். ஒவ்வொரு நபரும் கடவுளை அவரவர் வழியில் வழிபட உரிமை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கருத்துக்கு அவர் சார்ந்திருக்கும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி இரட்டை வேடம் போடுகிறார். மஹூவா மொய்த்ராவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் அல்லது கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனக்கூறியது.
ம.பி., மாநிலம் போபாலில், மத உணர்வுகளை புண்படுத்தியதாக மஹூவா மொய்த்ரா மீது ஐபிசி 295 ஏ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இது தொடர்பாக மஹூவா மொய்த்ரா வெளியிட்ட அறிக்கையில், காளியை வழிபடுபவள் என்ற அடிப்படையில் எதற்கும் பயப்பட மாட்டேன். உங்களின் குண்டர்கள், போலீசை கண்டு பயப்பட மாட்டேன் எனக்கூறியுள்ளார்.
Advertisement