குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஆகம முறைப்படி நேற்று நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி அழைத்தல், யாகசாலை வழிபாடு, நான்கு கால பூஜைகள் போன்ற ஆன்மீக சடங்கு, சம்பிரதாயங்கள் நடைபெற்றன. நேற்று அதிகாலை மங்கள இசை, விநாயகர் பூஜை, மகா பூர்ணா குதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கருமாபுரம் ஆதினம் ஸ்ரீமதுஆண்ட சிவசுப்ரமண்ய பண்டித குரு சுவாமிகள் தலைமையிலான வேத குழுவினர் ராஜகணபதி, சக்தி மாரியம்மன், வீரமாத்தியம்மன், பொட்டு சாமி ஆகிய கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.