சிங்கப்பூரில் கார்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
தனிநபர் வாகனங்களை குறைத்து பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் சிங்கப்பூர் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், கார்களுக்கான பெர்மிட்டை குறைத்து, அதன் கட்டணமும் ஒரு லட்சத்து 4 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் வால்வோ, பென்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட பெரிய கார்களை வாங்குவோர் கூடுதலாக 2 லட்சம் சிங்கப்பூர் டாலர்களை செலுத்த
வேண்டியுள்ளது.
இது பெட்ரோல் டீசல் கார்களுக்கு மட்டுமல்ல, எலட்ரிக் கார்களுக்கும் பொருந்தும். சிங்கப்பூரின் இந்த நிலை பிற நாடுகளில் உள்ள பெரிய நகரங்களிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.