சிதம்பரம் நடராஜர் கோவில் நடந்த சம்பவத்தை தான் அவமானமாக பார்க்கவில்லை என்றும் மக்களுடைய பிரச்சனைகளை சிவன் தான் தீர்க்க வேண்டும் எனவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேட்டியளித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்ற புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜனுக்கு அவமரியாதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த துணைநிலை ஆளுநர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனத்திற்கு சென்றிருந்தாக கூறிய அவர், கோவில் வளாகத்திற்குள் தான் அமர்ந்த போது இங்கே அமரக்கூடாது என்றும் அருகில் உள்ள இடத்தில் ஒருவர் சொன்னதாகவும் ஒருவர் கூறினார் அதனை அவமானமாக நான் நினைக்கவில்லை என்றார்.
மேலும் சிதம்பரம் கோயில் என்றாலே பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். ஆனால் பிரச்சனைதான் வருகிறது. அவர்களுடைய பிரச்சனையை தீர்க்கப்பட வேண்டும். மக்களோட பிரச்சனையை தீர்க்கப்பட வேண்டும். அதற்கு சிவன் இருக்கிறார் என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM