இந்திய துவங்கி அமெரிக்க வரையில் சீன நிறுவனங்களுக்கும், சீனாவுக்குத் தொடர்புடைய நிறுவனங்களும் கடுமையான தடை விதிக்கப்பட்டு ஒரு பைசா கூட முதலீடு செய்ய முடியாத அளவிற்கு முதலீட்டு வர்த்தகச் சந்தைகள் நெருக்கப்பட்டு வந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு திடீரெனச் சீன நிறுவனங்களுக்கான கதவை திறந்துள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. 5 முக்கிய சேவைகளை போனிலேயே பெறலாம்.. எப்படி தெரியுமா?
இந்தத் திடீர் அனுமதி எதற்காக..? இந்திய முதலீட்டுச் சந்தையில் தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 80 ரூபாய் வரையில் சரியை காத்திருக்கும் நிலையில், மத்திய அரசின் முடிவு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மோடி அரசு
பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்டுப்பாட்டில் இருக்கும் அன்னிய முதலீட்டு அனுமதிகளில் ஜூன் 29ஆம் தேதி மட்டும் இந்தியா சுமார் 80 சீன அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி அளித்து முதலீடு செய்ய ஒப்புதலும் கொடுத்துள்ளது என் RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் கிடைத்துள்ளது.
இந்திய சீன எல்லை பிரச்சனை
இந்திய சீன எல்லையில் இரு நாட்டு ராணுவத்திற்கும் மோதல் ஏற்பட்ட நாளில் இருந்து சீன வர்த்தகங்களுக்கு அதிகப்படியான தடைகளும், 300க்கும் அதிகமான செயலிகளைத் தடை செய்தது. இதேவேளையில் மத்திய அரசு இந்தியா தனது எல்லையைப் பகிரும் நாடுகளுக்குத் தொடர்புடைய முதலீடுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.
தனிப்பட்ட ஒப்புதல்
அதாவது இந்தியாவுடன் எல்லையைப் பகிரும் சீனா, நேபாள், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் முதலீடுகளுக்கு நேரடியாக அனுமதிக்க முடியாது என்றும், மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் வரும் DPIIT அமைப்பிடம் தனியாக ஒப்புதல் பெற வேண்டும் என அறிவித்து இருந்தது.
80 முதலீடுகளுக்கு ஒப்புதல்
இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பின்பு சீன மற்றும் சீன நிறுவனங்களைத் தொடர்புடைய 382 முதலீட்டு விண்ணப்பங்கள் குவிந்தது. இதில் 80 விண்ணப்பங்களுக்கு ஜூன் 29ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளதாக RTI கேள்விக்குப் பதில் கிடைத்துள்ளது.
திட்டமிட்டு ஒப்புதல்
மத்திய அரசு சீன முதலீட்டு விண்ணப்பங்களைத் தீவிரமாக ஆய்வு செய்து, இந்திய நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்தாவாறு இருக்கும் சிறிய அளவிலான பங்கு கைப்பற்றல் திட்டத்தை மட்டுமே அனுமதி அளித்துள்ளதாகச் சந்தை வல்லுனர்கள் கூறுகினர். இதேபோல் ஈகாமர்ஸ், நிதியியல் சேவை தாண்டி உற்பத்தி துறை சார்ந்த முதலீட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.
ரூபாய் மதிப்பு
இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வேகமாக வெளியேறி வரும் நிலையில் சீன முதலீடுகளின் வருகை மூலம் இந்திய ரூபாய் மதிப்பின் தொடர் சரிவில் இருந்து காப்பாற்ற முடியும். ஒன்றிய அரசின் இந்த 80 விண்ணப்பங்களின் ஒப்புதலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
Modi govt Nod for 80 FDI proposals related to China and china Cos
Modi govt Nod for 80 FDI proposals related to China and china Cos சீனா-வுக்குக் கதவை திறந்த இந்தியா.. மோடி அரசின் திடீர் முடிவு எதற்காக..?