76 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதைவடிவ எலும்புக்கூடு ஜூலை 28ம் தேதி விற்பனைக்கு வருகிறது.
மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் கிரேட்டேசியஸ் காலத்தில் மாமிச உண்ணியாக இருந்த கோர்கோசொரஸ் வகையை சேர்ந்த டைனோசரின் எலும்புக்கூடுகள், 2018ம் ஆண்டு அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள ஜூடித் நதிக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தலை முதல் வால் வரை 10 அடி உயரமும் 22 அடி நீளமும் கொண்ட டைனோசரின் எலும்புக்கூடு ஏலம் நியூயார்க் மையத்தில் ஜூலை 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.