புதிய இணைப்பு
போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலாம் இணைப்பு
முன்னாள் எம்.பியான ஹிருணிகா பிரேமசந்திர ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தாம் அவ்விடம் வரும் வரை பாதுகாப்பு பிரிவினர் யாரும் அறிந்திருக்கவில்லையென கூறியுள்ளார்.
இந்நிலையில் திடீரென ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாசலில் முளைத்த ஹிருணிக்காவைக் கண்டதும் ஜனாதிபதி மாளிகையின் வாயில்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டது.
எனினும் ஹிருணிக்கா தரப்பினர், ஜனாதிபதியை கடுமையான வார்த்தைகளில் அர்ச்சனை செய்தவண்ணம் மாளிகையின் பிரதான வாயில் முன்பாக தரையில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்