ஜேர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குண்டு வெடிப்பு சம்பவம்: பின்னணியில் இருப்பது யார்?


ஜேர்மன் நகரம் ஒன்றில் அமைந்துள்ள கட்சி அலுவலகம் ஒன்றில் பயங்கர வெடிகுண்டு ஒன்று வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஜேர்மனியிலுள்ள Oberhausen என்ற நகரில் அமைந்துள்ள socialist Left Party என்ற கட்சியின் அலுவலகத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 3.20 மணியளவில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது.

குண்டு வெடித்ததில், அந்த அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியதுடன், அந்தக் கட்டிடத்தின் அருகிலிருந்த ஒரு சலூன் மற்றும் ஒரு ட்ராவல் ஏஜன்சி கட்டிடமும் சேதமடைந்துள்ளன.

அதிகாலை நேரம் என்பதால் அந்த கட்டிடங்களில் யாரும் இல்லாததால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு அரசியல் நோக்கம் கொண்டது என்றும், அதன் பின்னணியில் வலது சாரியினர் இருக்கலாம் என நகர கட்சித் தலைவரான Yusuf Karacelik என்பவர் தெரிவித்துள்ளார்.

பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 

ஜேர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குண்டு வெடிப்பு சம்பவம்: பின்னணியில் இருப்பது யார்? | Bomb Explosion That Caused A Sensation In Germany

ஜேர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குண்டு வெடிப்பு சம்பவம்: பின்னணியில் இருப்பது யார்? | Bomb Explosion That Caused A Sensation In Germany





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.