இந்திய மிடில் கிளாஸ் மக்களின் மிகப்பெரிய முதலீடாகவும், சேமிப்பாகவும் விளங்கும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால், தங்கத்தை வாங்குபவர்களைக் காட்டிலும், தங்கத்தை அடகு வைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குத் தங்க நகை கடனை மக்கள் பெற்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை முதல் தங்கம் விலை சர்வதேச சந்தையில் அதிகமாகி வரும் காரணத்தால் இந்திய சந்தையிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலையில் ஏற்றப்பட்டு உள்ள உயர்வு சாமானிய மக்களுக்குப் பெரும் பாதிப்பாக உள்ளது.
சாமானிய மக்கள் இனி வாங்க முடியுமா.. தங்கம் விலை இன்னைக்கு எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை நேற்று 1764 டாலராக இருந்த நிலையில் இன்றைய காலை வர்த்தகத்தில் 1,772 டாலர் வரையில் உயர்ந்தது. இதன் பிரதிபலிப்பாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
MCX சந்தை
எம்சிஎக்ஸ் சந்தையின் புதன்கிழமை வர்த்தகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான 10 கிராம் தங்கத்தின் ஆர்டர் விலை 0.13 சதவீதம் அதிகரித்து 51,370 ரூபாயாக உயர்ந்துள்ளது, இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.48 சதவீதம் அதிகரித்து 57,137 ரூபாயாக உயர்ந்துள்ளது.
ரெசிஷன் அச்சம் உச்சம்
வல்லரசு நாடுகளில் ரெசிஷன் அச்சம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ள நிலையில் உலோகம், கச்சா எண்ணெய் என அனைத்து முக்கியமான கமாடிட்டி பொருட்களின் விலையில் அதிகப்படியான மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரு முதலீட்டாளர்கள் வரையில் தங்களது பணத்தைப் பாதுகாக்கத் தங்கம் மீது திரும்பி வருகின்றனர்.
பங்குச்சந்தை
பங்குச்சந்தை வர்த்தகம் ஏற்கனவே அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் ரெசிஷன் வந்தால் கட்டாயம் பங்குச்சந்தை பெரிய அளவிலான சரிவை எதிர்கொள்ளும் என்பது உறுதியாகத் தெரியும். இதனால் அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களுக்கும் தங்கம் முக்கியமான அதேநேரத்தில் பாதுகாப்பான முதலீடாகவும் தெரிகிறது.
FOMC ஜூன் கூட்டம்
இதேவேளையில் அமெரிக்காவின் FOMC ஜூன் கூட்டத்தின் முடிவுகளுக்காகத் தற்போது சந்தை முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர். இக்கூட்டத்தின் முடிவுகள் தொடர்ந்து வட்டியை உயர்த்தும் பாதையில் இருந்தால் கட்டாயம் முதலீட்டுச் சந்தையில் மீண்டும் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
ரூபாய் மதிப்பு
அனைத்திற்கும் மேலாக இந்திய சந்தையில் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கச்சா எண்ணெய் முதல் தங்கம் வரையில் அனைத்தும் இறக்குமதியைச் சார்ந்து இருக்கும் காரணத்தால் ரூபாய் மதிப்பில் 79.32 ரூபாய் அளவிலான வீழ்ச்சி அதன் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் இறக்குமதி
மேலும் ஜூன் மாதத்தில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி 3 மடங்கு உயர்ந்து வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்த நிலையில், 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 49 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
தங்கம் இறக்குமதி வரி உயர்வு
இந்த நிலையில் மத்திய அரசு தங்கம் இறக்குமதி மீதான அடிப்படை வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த வரி உயர்வின் மூலம் 10 கிராம் தங்கம் விலை 2000 ரூபாய் வரையில் உயர வாய்ப்பு உள்ளது.
மிடில் கிளாஸ் மக்கள்
ஏற்கனவே தங்கம் விலை உயர்வு மிடில் கிளாஸ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வரி உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இந்தியாவில் புதிதாகத் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறையவும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
Gold Price Today 6 July 2022: Gold price surge amid global market; Middle class people suffer
Gold Price Today 6 July 2022: Gold price surge amid global market; Middle class people suffer தங்கம் விலை தொடர் உயர்வு.. புலம்பும் மிடில் கிளாஸ் மக்கள், எப்போதான் வாங்குறது..!