சென்னை : தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள், கல்லூரிகளில் காலியாக உள்ள 10,371 ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் டிசம்பரில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை செப்டம்பரில் வெளியிடப்பட்டு, டிசம்பரில் தேர்வு நடத்தப்படும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.