சுழன்று கொண்டிருக்கும் நவீன உலகத்தில் சக மனிதனுக்கு உதவுவதே பெரிய ஆச்சர்யமாக பார்ப்பவர்கள் மத்தியில், வாயில்லா ஜீவனுக்கு உதவியிருக்கிறார் கடைக்காரர் ஒருவர்.
பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலையெங்கும் மழைநீர் தேங்கி இருக்கின்றன. இது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாது, கால்நடைகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அண்மையில் வைரலான வீடியோவின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
அந்த வகையில், மழை காரணமாக மான்சா பகுதியில் உள்ள சாலையில் மழை நீர் தேங்கியிருந்ததோடு, மின்சார கம்பங்கள் மூலம் மின்கசிவும் ஏற்பட்டிருக்கிறது. அதில், பசு மாடு ஒன்று அந்த மழை நீரில் ஊர்ந்த படி சென்றபோது மின்கசிவால் பாதிக்கப்பட்டு துடிதுடித்து கீழே விழுந்திருக்கிறது.
करंट लगने से छटपटाती हुई गाय को एक दुकानदार ने कपड़े से खींच कर बचाया।
ये है मानवता का उदाहरण pic.twitter.com/jRlaxYyv6w
— Anamika Jain Amber (@anamikamber) July 2, 2022
அப்பகுதியில் இருந்த கடைக்காரர் ஒருவர் இதனை கண்டதும், உடனடியாக அந்த பசுவை காப்பாற்ற முற்பட்டு தனது கடையினுள் சென்று துணியுடன் வந்து பசுவின் பின் கால்களை கட்டி இழுக்க முயற்சித்திருக்கிறார். அவருக்கு அருகே இருந்த சில நபர்களும் உதவ பாதுகாப்பாக அந்த பசுவை மீட்டிருக்கிறார்கள்.
இதனால் உயிர் பிழைத்த அந்த பசு அங்கிருந்து கடந்து சென்றிருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இதுபோக அந்த வீடியோ 2 மில்லியனுக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டும் இருக்கிறது.
வீடியோவை பகிர்ந்த அனாமிகா என்பவர், மனிதநேயத்திற்கான உதாரணமாக இந்த நிகழ்வு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் உயிரை பணையம் வைத்து பசுவை காப்பாற்றிய அந்த கடைக்காரரை ஹீரோ என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM