கால்வாயில் குளிக்க சென்ற இடத்தில் நீரில் மூழ்கி சமையல் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி படுக்கபத்து கீழத்தெருவை சேர்ந்தவர் சித்திரைபாண்டி. இவர் அந்த பகுதியை சேர்ந்த இசக்கி என்பவருக்கு சொந்தமான லாரிகளை ஒட்டி வருகிறார். வேலையின் காரணமாக சீதப்பால் பகுதியில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. லாரிகளை பார்ப்பதற்கு இசக்கி, சித்திரைபாண்டி மற்றும் வீரபாண்டியன் ஆகிய மூவரும் சென்றுள்ளனர். அங்கிருந்த கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது கால்வாயில் தண்ணீர் அதிகம் இருந்ததால் அவர் நீரில் இழுத்து செல்லப்பட்டார்.
இதனை கண்ட மற்றவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், அவர் அதற்குள் அவர் நீரில் மாயமானார். உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் அவரை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. காலையில் அங்கு வந்த சித்திரைபாண்டியின் உறவினர்கள் நீரில் இறங்கி அவரை தேடினர்
அங்கு செடிக்கு அடியில் சிக்கி இருந்த அவரின் சடலத்தை மீட்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.